Wednesday, 1 December 2010

கண்ணம்மா

என் காதருகே அவள் சுவாசம்,

என் கையிடுக்கில் அவளது கூந்தல் காடு,

தொட்டுவிடும் தூரத்தில் அவளது முகம்,

எனக்காகவே எதையும் செய்யும் வேகம் - அவள் கண்கள்.

'கண்ணம்மா' வென்று கூப்பிடச் சொன்னாள்

அதெல்லாம் சினிமாக்காதலடி என்று நகைத்தேன்.

முகம் சுண்டினாலும் என் மடி சேர்வாள்

தவறாது கடலைச் சேரும் நதி போலே.

அவளது ஓரப்பார்வை - நான் ஆணெனக் காட்டும் கண்ணாடி

ஆணவப் பதக்கங்கள் - என்னைக் கண்டதும் அவளுள் எழும் பூரிப்பு!

என் காதலை அவளுக்குச் சொல்லியது இல்லை நான்

'வார்த்தைகளிலா புரிதல்?' என்று வேதாந்தம் பேசியதாய் ஞாபகம்.

மனம் பேச மறுக்கும் இடத்தில் பேசிய வார்த்தைகள் புரியாது

மனம் பேச மறக்கும் இடத்தில் பேசாத வார்த்தைகள் புரியாது.

மனம் பேச மறந்த என்னிடத்தில் இன்று வார்த்தைகள் ஏராளம்

பேசத் தான் ஆளில்லை, நதியில் தான் நீரில்லை.

ஊர் சுற்றும் உல்லாசத்தில் அவள் மனம் உணர மறுத்தேன்.

அறிவைத் தேடும் ஆர்வத்தில் அவளை எங்கோ தொலைத்தேன்!

அவள் விழியோரத்தின் ஒரு துளிக் கண்ணீர்

இன்றும் கேட்கிறது என்னைக் 'கண்ணம்மா' என்று கூப்பிடச் சொல்லி....

கலியுகம் வந்தாச்சு,கண்ணனைத் தான் காணோம்!

சுழற்றி விட்டால்

சுற்றும்சிறு பம்பரம் போல்

ஒற்றைச்சொல்லின் கூர்முனையில்

கிறுக்காய் சுற்றுகிறது உலகம் - பணம்.